விடுதலை 2-க்கு தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ்.. வீடியோவுடன் இதோ! சூரி நெகிழ்ச்சி
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்து இருக்கும் விடுதலை படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 1 மற்றும் 2ம் பாகம் இரண்டும் திரையிடப்பட்டு இருக்கிறது.

ரெஸ்பான்ஸ்
படம் பார்த்து முடித்து அனைவரும 15 நிமிடம் கைதட்டி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.
"சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது" என சூரி தெரிவித்து இருக்கிறார்.
நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த
— Actor Soori (@sooriofficial) February 1, 2024
நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது... ?
#Viduthalai… pic.twitter.com/ID1afWZjpC
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu