மூன்று நாட்களில் விடுதலை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விடுதலை.
வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மேலும், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன் என பலரும் நடித்திருக்க இளையராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ஆம், முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனத்தையும் வசூலை பெற்று வரும் இப்படம் கடந்த மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாம் விடுதலை திரைப்படம்.
நயன்தாரா மகன்களின் பெயர்கள்.. மேடையிலேயே அறிவித்த நடிகை! வைரல்