ஹோட்டல் அறைக்கு வர கட்டாயப்படுத்திய இயக்குனர்.. வித்யா பாலனுக்கு சென்னையில் நடந்த அதிர்ச்சி
வித்யா பாலன்
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை வித்யா பாலன். சில்க் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் படம் மூலமாக இந்திய அளவில் பிரபலம் ஆனார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் நடித்து இருக்கிறார்.
வித்யா பாலனுக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது அவர் அளித்த பேட்டியில் தான் சந்தித்த casting couch சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.

ஹோட்டல் அறை.. கட்டாயப்படுத்திய இயக்குனர்
"சினிமாவுக்கு வந்தால் பெண்கள் மோசமான அனுபவங்களை சந்திக்க வேண்டும் என பல கதைகள் சொல்கிறார்கள். அதற்காகவே என் பெற்றோர் என்னை சினிமா துறைக்கு போகவேண்டாம் என கூறினார்கள். ஆனால் நான் அப்படி எந்த பெரிய மோசமான சம்பவத்தை சந்திக்கவில்லை, இந்த ஒன்றை தவிர."
"சென்னையில் ஒரு விளம்பர பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்று இருந்தபோது ஒரு இயக்குனரை காபி ஷாப்பில் சந்தித்தேன். அவர் ஆரம்பத்தில் இருந்தே எனது ஹோட்டல் அறைக்கு சென்று பேசலாம் என்றே கூறி கட்டாயப்படுத்தி கொண்டே இருந்தார்."
"அந்த நேரத்தில் நான் ஸ்மார்ட் ஆக ஒரு விஷயத்தை செய்தேன். ஹோட்டல் அறை கதவை திறந்தே வைத்துவிட்டேன், அப்போது அவருக்கு தெரிந்திருக்கும், வெளியே செல்வது மட்டுமே ஒரே வழி என்று. என் பாதுகாப்புக்காக அப்படி செய்தேன். அதற்கு பிறகு அந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்" என வித்யா பாலன் கூறி இருக்கிறார்.

லியோ ஷூட்டிங் செல்ல மாஸ் லுக்கில் வந்த வில்லன் சஞ்சய் தத்! வைரல் போட்டோ
அணுசக்தி விவகாரம்., அமெரிக்காவுக்கு எந்தவொரு சலுகையும் வழங்க முடியாது: ஈரான் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri