இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

By Kathick Dec 08, 2024 07:30 PM GMT
Report

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” | Vidyasagar Ayyappan Album Ashta Ayyappa Avatharam

சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை ஆல்பத்தினை வெளியிட்டுள்ளது.

“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தின் 10 பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைக்க, முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

இந்த பாடல்களின் ஆடியோ வடிவம் வெளியாகி, இசை தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோ வடிவில் இது வரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான “கருப்பு வராரு” வீடியோ பாடலில், தினேஷ் மாஸ்டர் நடனமைக்க, இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடனமாடியுள்ளார்.

“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பம் பாடல் விபரம்

1.அஷ்ட ஐயப்ப அவதாரம்

வித்யாசாகர், திருப்புகழ் மதிவண்ணன், விஜய் பிரகாஷ்

2.காடேரி மலையேரி

வித்யாசாகர், முரளிகிருஷ்ணன் ரங்கன்

3.தங்கத்திலே வீடு கட்டி

வித்யாசாகர், கே.எஸ்.சித்ரா

4.அய்யனே

வித்யாசாகர், சந்தீப் நாராயண்

5.ஹரி ஓம்

வித்யாசாகர், விஜய் பிரகாஷ், டாக்டர் கிருத்தியா

6.கருப்பு வராரு

வித்யாசாகர், சங்கர் மகாதேவன், டாக்டர் கே.பி. வித்தியாதரன்

7.கண்ட கண்ட வித்யாசாகர், ஹரிசரண், நெல்லை ஜெயந்தா

8.துள்ளி வரகுது வேல்

வித்யாசாகர், அபிநயா செண்பகராஜ், மாளவிகா ராஜேஷ், சுஷ்மிதா நரசிம்மன், அபர்ணா நாராயணன், வாலி

9.வில்லாளி வீரனே

வித்யாசாகர், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கிருத்தியா

10.பம்பா கணபதி

வித்யாசாகர், மது பாலகிருஷ்ணன், பா.விஜய் 

கீழ்காணும் லிங்கில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.  

இந்த லிங்க்கை க்ளிக் செய்து பாடல்களை கேளுங்கள்  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US