நாயகனாக அறிமுகமாகும் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன்.. அவரது ' மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம்

By Parthiban.A Feb 24, 2026 01:03 PM GMT
Report

பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்த பாடகர் - நடிகர் - இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ' மாயம் நீயடி' எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார்.

இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதல் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக மாண்டேஜஸ் காட்சியில் வெளிபடுத்தி ரசிகர்களை மாயம் செய்து மயக்குகிறார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் வழக்கமான சுயாதீன இசை பாடலுக்கான காணொலியாக இல்லாமல்.. கமர்சியல் திரைப்படங்களில் இடம்பெறும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கிறது என்பது உறுதியாகிறது.

நாயகனாக அறிமுகமாகும் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன்.. அவரது

ஃபோட்டோகிராபருக்கும், ஓவியருக்கும் இடையேயான அறிமுகம் - நட்பு - காதல் - புரிதல் - தனித்திறன்- காத்திருப்பு - சந்தோஷம் - ஏக்கம் - தவிப்பு - என ஒவ்வொரு உணர்வும் மென்மையான இதமான இனிமையான இசையுடன் காட்சியாக ஒளிரும் போது ரசிகர்களுக்கு அற்புதமான இசை அனுபவமும், திரை அனுபவமும் கிடைக்கிறது. இதற்கு காரணமாக இருந்த ஹர்ஷவர்தனை கை வலிக்க கரம் குலுக்கி பெரிய பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவிக்கலாம்.

ஹர்ஷவர்தன் - இசையை சுவாசமாக நேசிக்கும் இசை கலைஞர் மட்டுமல்ல... இசையனுபவத்தை சுவை மிக்க அமிர்தமாக வழங்கும் அற்புதமான ஆற்றலையும் பெற்றவர். இவருடைய மேலதிக முயற்சியில் உருவாக்கி இருக்கும் மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் சிறந்த சான்று.

இவர் ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின் தொடர்கிறார்கள். இவருடைய ஒரு மியூசிக்கல் போஸ்ட்டுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், லட்சக்கணக்கான வ்யூஸ்களும் கிடைப்பதால் சமூக வலைதளவாசிகளின் ஃபேவரைட் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.

காதலர் தின வாரமாக கொண்டாடும் வேளையில் இந்த 'மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் இன்று வெளியாகி இருக்கிறது. அனைத்து மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு இசை ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இதனிடையே ஹர்ஷவர்தன் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக‌ இருக்கிறார் என்பதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US