தோற்றத்தை மாற்றிய நடிகை! அசந்து போன ரசிகர்கள்! போட்டோவில் இருப்பது யார் என தெரிகிறதா?
சினிமா நடிகை உடல் மீது மிகுந்த அக்கறை கொண்டு பராமரிப்பதையும், அழகாக வைத்துக்கொள்வதையும் முக்கியத்துவமாக கருதுவார்கள். ஹீரோயினுக்கு ஓகே, ஆனால் காமெடி நடிகர்கள், நடிகைகளுக்கு தங்களின் தோற்றமே பலம். காமெடியில் களமிறங்கிய இளம் நடிகை வித்யூலேகா ராமனை நினைவிருக்கும் தானே.
இவரின் அப்பா நடிகர் மோகன் ராமன். கௌதம் மேனன் இயக்கத்தில் நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் வீரம், காக்கி சட்டை, ஜில்லா, மாஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் தோற்றமும், பேச்சும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
2018 முதல் அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் கடந்த வருடம் 6 படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். கடந்த வருடம் அவருக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. தற்போது போலிஸ் கெட்டப்பில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.