ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகும் மதராஸி பட நடிகர்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட்
வித்யுத் ஜாம்வால்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் நடிகர் வித்யுத் ஜாம்வால்.

இவர் தமிழில் வெளிவந்த பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதில் துப்பாக்கி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் ரோல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இதன்பின், மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.
ஹாலிவுட்டில் வித்யுத்
இந்த நிலையில், நடிகர் வித்யுத் ஜாம்வால் அடுத்ததாக ஹாலிவுட்டில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல வீடியோ கேமான Street Fighter சீரிஸை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்று உருவாகவுள்ளது. இதில் வரும் Dhalsim என்கிற கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ், ஜேசன் மோமோ, ஒலிவியர் ரிச்சர்ட்ஸ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu