ஏகே 62 திரைப்படம் இப்படி தான் இருக்கும்.. இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிரடி
எகே 62
துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் ஏகே 62.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் நயன் தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது இப்படத்தின் கதாநாயகி திரிஷா என தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏகே 62 படம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது :
நான் இதுவரை காமெடி, ரொமான்ஸ் கதையில் மட்டுமே படங்களை இயக்கி இருக்கிறேன். இதுவரை ஆக்ஷன் பக்கம் போனதில்லை. எகே 62 படத்தை இப்படி தான் இயக்க வேண்டும் என்று சொல்லாமல், எனக்கு முழு சுதந்திரதை கொடுத்துள்ளனர்.

அஜித்துக்காக எப்படி கதையை அமைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போல் கதையை உருவாகுங்கள் என்று கூறியுள்ளனர். இது அஜித் படம் அதனால் இப்படி தான் கதை இருக்க வேண்டும் என்று யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை.
அதனால், அஜித்துகாக முற்றிலும் மாறுபட்ட கதையை தயார் செய்து இருக்கிறேன். கண்டிபாக இந்த கதை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
படுமோசமான டிக்கெட் புக்கிங்.. விஜய், அஜித்துக்கே இந்த நிலைமையா
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri