காதல் போரடிச்சா உடனே அது தான்.. விக்கி-நயன் எடுத்திருக்கும் முடிவு
சினிமா துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால் விக்னேஷ் ஷிவன் மற்றும் நயன்தாரா இருவருமே கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் எப்போது திருமணம் என கேட்டால் மட்டும் அது பற்றி வெளிப்படையாக பதில் கூறாமல் இருக்கின்றனர்.
அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜைகள் சென்று வருகின்றனர். அவர்கள் பரிகார பூஜைகள் அனைத்தும் செய்து முடித்தபிறகு தான் திருமணம் செய்ய உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் காதல் பற்றி பேசி இருக்கிறார். தங்களுக்கு நடுவில் அழகான காதல் இருக்கிறது என கூறிய அவர், அந்த காதல் போர் அடித்தால் திருமணம் செய்துகொண்டு, அந்த காதலை கொண்டாடுவோம் என கூறி இருக்கிறார்.

விக்கி மற்றும் நயன் இருவரும் தற்போது சினிமாவில் செம பிஸியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் படத்தை இயக்க இருக்கிறார். மறுபுறம் நயன் தற்போது ஷாருக் கான் படத்தின் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருப்பதும் அவர்கள் திருமணம் தாமதமாக ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.