உங்களுக்கும் நயன்தாராவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை சொல்லுங்க.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..
திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் கூட நடிகை நயன்தாராவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.
ஆனால், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும், அதன் பிறகு வெளியாகவில்லை. மேலும் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் திருமணம் தள்ளிப்போய் உள்ளது என்று சில தரப்பு கூறுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், ரசிகர்கள் பல கேள்வி கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் " உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? " என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் " இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் " என கூறியுள்ளார்.