ஜோடியாக புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ! வைரல் வீடியோ
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் நேற்று புத்தாண்டை அவர்கள் அங்கு ஜோடியாக கொண்டாடி இருக்கின்றனர். அவர்கள் Burj Khalifa முன் நின்று 2022 வந்ததை வான வேடிக்கையுடன் கொண்டாடி இருக்கின்றனர்.
அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் விக்னேஷ் சிவன் அதில் நயன்தாராவை கட்டிப்பிடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் திருமணம் எப்போது என கேள்வி கேட்டு வருகின்றனர். கடந்த பல வருடமாகி ஒன்றாக இருந்து வரும் நிலையில் இந்த வருடமாவது அவர்கள் திருமணம் நடைபெறுமா என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த வருடம் பிப்ரவரி 22ம் தேதி 22.2.2022 திருமணம் நடத்த பலரும் நினைப்பார்கள். அந்த தேதியை வீணாக்க விரும்பவில்லை என விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri