நயன்தாரா பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்துள்ள விக்னேஷ் சிவன்... என்ன தெரியுமா, இத்தனை கோடியா?
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி தான் நயன்தாரா.
கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் இப்போது தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகியாக வலம் வருகிறார்.

நானும் ரவுடித்தான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

பரிசு
பல கோடி சொத்துக்களுடன் முன்னணி நாயகியாக வலம்வரும் நயன்தாராவிற்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருள் ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால் Spectre காரை தான் பரிசாக கொடுத்துள்ளாராம். புதிய காருடன் மனைவி, குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இந்த விஷயத்தை அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இந்த காரின் விலை சுமார் ரூ. 10 கோடிக்கு இருக்கும் என கூறப்படுகிறது.
