நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்! மொத்தம் இத்தனை பேருக்கு தான் அழைப்பா?
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதியில் நடக்க இருக்கிறது என்று தான் முதலில் தகவல் பரவியது. ஆனால் அதற்கு பிறகு மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி திருமணம் என தெரியவந்தது. அதை உறுதி செய்யும் விதமாக திருமணம அழைப்பிதழும் இணையத்தில் வைரல் ஆனது.
சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. காலை 5.30 முதல் 7 மணி வரை தான் முகூர்த்த நேரம்.
நயன்தாரா தனது நிச்சயதார்த்தத்திற்கு யாரையும் அழைக்காத நிலையில் தற்போது திருமண விழாவுக்கு 200 பேரை அழைத்திருக்கிறார். அதில் விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் உள்ளனர். சினிமா துறையினர், நண்பர்கள் என நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
நயன்தாராவுக்கு நெருக்கமான சமந்தா நிச்சயம் திருமணத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.