நயன்தாரா இதனால் தான் பட ப்ரோமோஷனுக்கு வருவதில்லை.. விக்னேஷ் சிவன் சொன்ன காரணம்
நயன்தாரா
நடிகை நயன்தாரா என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தாலும், அவர் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது.
நயன்தாரா ஹிந்தியில் நடித்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளவில்லை. இது பற்றி பாலிவுட் மீடியாக்கள் கூட கேள்வி எழுப்பிய நிலையில், ஷாருக் கான் பல்வேறு காரணங்களை கூறி கேள்விகளை சமாளித்தார்.
ஏன் வருவதில்லை..
நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் விற்கும் பிராண்ட் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதன் அறிமுக விழா மலேசியாவில் சமீபத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டார்.
பட ப்ரோமோஷனில் மட்டும் நயன் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது ஏன் என்கிற காரணத்தை விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.
"படம் நன்றாக இருந்தால் அதுவே promote செய்துகொள்ளும். That's her inner belief" என்று அவர் கூறி உள்ளார்.