விக்னேஷ் சிவன் உயிரை பிடித்துக்கொண்டு.. போட்டோவை நக்கலாக பதிவிட்ட விக்கி
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது மகன்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
அவர்கள் குழந்தைகள் உடன் எடுக்கும் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் நிலையில் அவை தொடர்ந்து வைரல் ஆகின்றன.
உயிரை பிடித்துக்கொண்டு
அப்படி விக்னேஷ் சிவன் வெளியிடும் போட்டோக்களுக்கு மீடியாக்களில் வரும் செய்திகளின் தலைப்புகள் சமீபத்தில் வைரல் ஆகின. 'கையில் உயிரை பிடித்துகொண்டு விஜய்யை சந்தித்த விக்னேஷ் சிவன்' என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இந்நிலையில் அப்படி வரும் செய்திகளை நக்கல் செய்யும் விதமாக லேட்டஸ்ட் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இரண்டு மகன்களையும் கையில் பிடித்து இருக்கும் போட்டோவை பதிவிட்டு, "ஒரே கையில் உயிரையும் உலகத்தையும் பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்" என நக்கலாக கமெண்ட் செய்து இருக்கிறார்.


உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
