திருமணத்திற்கு தனது பெரியம்மாவை கூட அழைக்காத விக்னேஷ் சிவன் !
பெரியம்மாவை அழைக்காத விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இவர்கள் இருவரும் பல வருட காதலுக்கு பின் நேற்று திருமணம் செய்துகொண்டனர், அவர்களின் திருமணத்திற்கு பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று இவர்களின் திருமணத்தை தொடர்ந்து இன்று அவர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே தற்போது விக்னேஷ் சிவனின் உறவினரான அவரின் பெரிம்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "விக்னேஷ் சிவன் என்னை கல்யாணத்திற்கு அழைப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் கூப்பிடவில்லை.
திருமணத்திற்கு பின் விருந்திற்காவது அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுவம் நடக்குமா என்பது தெரியவில்லை. விக்னேஷ் சிவன் சிறுவயதில் இருந்தே எண்களின் வீட்டில் தான் வளர்ந்தார்.
அவர் எதற்காக பெரியம்மா பெரியப்பாவை வெறுக்கிறார் என தெரியவில்லை" என வருத்தத்துடன் பேசியுள்ளார் விக்னேஷ் சிவனின் பெரியம்மா.

7 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படம் செய்துள்ள ஒட்டுமொத்த வசூல் ! எத்தனை கோடி தெரியுமா?
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu