விக்னேஷ் சிவன் மீது வழக்கு போடுவேன்.. LIC டைட்டில் பற்றி வெடித்த பிரச்சனை
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜை உடன் தொடங்கியது. படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும் நயன்தாராவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
படத்திற்கு LIC - Love Insurance Corporation என டைட்டிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த டைட்டில் தான் தற்போது புது பிரச்னையை கிளப்பி இருக்கிறது.
தயாரிப்பாளர் புகார்
இயக்குனர் SS குமரன் என்பவர் ஏற்கனவே LIC என்ற டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். அவரை அணுகி விக்னேஷ் சிவன் டைட்டில் வேண்டும் என கேட்ட நிலையில், அவர் தர முடியாது என மறுத்துவிட்டாராம்.
அதன் பிறகும் விக்னேஷ் சிவன் LIC என டைட்டிலை அறிவித்து இருப்பதற்கு SS குமரன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
LIC டைட்டிலை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது, மீறினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் எனவும் அவர் கூறி இருக்கிறார்.