ரூ. 200 கோடி வசூல் செய்யும் என நினைத்தேன்.. LiK தோல்வி குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

By Karthick Raja May 11, 2026 09:20 AM GMT
Report

LiK

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கொம்பனி (LiK). லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்கள் கொடுத்த பிரதீப் நடிப்பில் உருவான நான்காவது படம் என்பதால் இப்படமும் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை LiK முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் தோல்வியை நோக்கி சென்றது.

ரூ. 200 கோடி வசூல் செய்யும் என நினைத்தேன்.. LiK தோல்வி குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Talk About Lik Movie Flop

இந்த நிலையில், LiK தோல்வி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஓபன் டாக்

"நான் ஒரு கனவுடன் வந்தேன், சிறியதல்ல, பாதுகாப்பானதும் அல்ல, நம்பிக்கையின் புயல். இந்த கதை கோடிக்கணக்கில் எதிரொலிக்கும்; திரையரங்கின் சுவர்களை அதிர வைக்கும் என்ற நம்பிக்கையில் நான் கைதட்டலை கற்பனை செய்தேன்; அதை நான் திரையரங்குகளிலும் பார்த்தேன். நான் சிரிப்பை வரவழைத்தேன்; அதை திரையரங்குகளிலும் கேட்டேன். ஆனால், இன்னமும் ரூ. 100 கோடி என்கிற மைல்கல்லை தொடவில்லை. உண்மையை சொல்லப்போனால் அதை விட இருமடங்கு வசூலை கற்பனை செய்திருந்தேன். ஆனால், இன்னமும் எங்கோ, ஏதோ ஒன்று சரியாக பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை".

ரூ. 200 கோடி வசூல் செய்யும் என நினைத்தேன்.. LiK தோல்வி குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Talk About Lik Movie Flop

"இறுதி முடிவை பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன்; ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல் இந்த படம் வெளியாவதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர்தான்".

ரூ. 200 கோடி வசூல் செய்யும் என நினைத்தேன்.. LiK தோல்வி குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் | Vignesh Shivan Talk About Lik Movie Flop

"என் தொலைபேசி பலமுறை ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன், புகழை விட உரத்த கேள்விகள் இருந்தும் இதோ நான் நிற்கிறேன். உடைந்து போகவில்லை, உலுக்கப்படவில்லை. ஆனால், பெருமிதம், ஆழ்ந்த பெருமிதம். ஏனென்றால் இந்த படத்திற்கு பின்னால் யாரும் காணாத போராட்டங்கள் இருந்தன. தூக்கமில்லாத இரவுகள், மௌனமான அம்சங்கள் மற்றும் என்னால் மட்டுமே உணர முடிந்த ஆயிரம் தடைகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US