அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்? அதிர்ச்சி ஆன அமைச்சர்
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது LIK என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் அஜித்தை வைத்து படம் இயக்க இருந்த நிலையில் அந்த படம் ட்ராப் ஆனது, அதற்கு பின் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK படத்தை தொடங்கி இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ பற்றிய சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் தனுஷ் மீது நயன் விக்கி இருவரும் கூறிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு நடத்தும் ஹோட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்?
இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரிக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசி இருக்கிறார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் இருக்கும் சீகல்ஸ் என்ற ஹோட்டலை அவர் விலைக்கு கேட்டதாகவும், அதை கேட்டு அமைச்சர் அதிர்ச்சி ஆனதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
அது அரசுக்கு சொந்தமான ஹோட்டல் என்றதும், அதை தரமுடியாது என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார். அதனால் அந்த ஹோட்டலை ஒப்பந்தம் அடிப்படையில் தர முடியுமா சென்றும் விக்னேஷ் சிவன் கேட்டாராம். அதுவும் சாத்தியம் இல்லை என அமைச்சர் கூறிவிட்டாராம்.