காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?

By Yathrika May 04, 2022 07:10 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். பட பெயர் கேட்டதுமே கதை எப்படி இருக்கும் என மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

படமும் ரிலீஸ் ஆகிவிட்டது, கதை சூப்பராக இருக்க மக்கள் கொண்டாடி படத்தை வெற்றிப்படமாக மாற்றிவிட்டார்கள்.

தமிழகம் முழுவதும் ரூ. 25 கோடிக்கு மேலாகவும், உலகம் முழுவதும் ரூ. 35 கோடிக்கு மேலாகவும் படம் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா? | Vignesh Shivn About Khatija Replacement

விக்னேஷ் சிவன் பேட்டி

படத்தின் புரொமோஷனுக்காக விக்னேஷ் சிவன் நிறைய பேட்டிகள் கொடுத்தார். அப்போது ஒரு பேட்டியில் அவர், படத்தில் கதிஜா வேடத்தை முதலில் த்ரிஷாவை நடிக்க வைக்க தான் கேட்டோம்.

ஆனால் அப்போது அவருக்கு வேறொரு பட கமிட்மென்ட் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே தான் அடுத்து சமந்தாவை அணுகினோம் என்றார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா? | Vignesh Shivn About Khatija Replacement

த்ரிஷா கதிஜா வேடத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என தெரியவில்லை, ஆனால் சமந்தாவின் சினிமா பயணத்தில் இந்த கதிஜா கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.

 Kgf 2 பட நடிகர் யஷ் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US