அஜித் பட அறிவிப்பால் விடிய விடிய தூங்காமல் விக்னேஷ் சிவன் செய்த வேலை- வைரல் வீடியோ
அஜித் ரசிகர்கள் வலிமை பட ரிலீஸில் இருந்தே கொண்டாட்டத்தில் தான் உள்ளார்கள். காரணம் படம் அவர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.
நேற்று அவர்களுக்கு வேற மாறி ஒரு அறிவிப்பும் வந்தது, அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்குவது தான்.
விக்னேஷ் சிவன் பயணம்
போடா போடி (2012) என்ற படம் மூலம் தமிழ் சினிமாயில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம் இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார், விரைவில் படம் வெளியாக உள்ளது.
இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன்-அஜித்துடன் கூட்டணி அமைக்கும் தகவல் வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
விக்னேஷ் சிவன் இதற்கு முன் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாரி மற்றும் அம்மா பாடலையும் எழுதியிருக்கிறார்.

கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்
நேற்று அதிகாரப்பூர்வமாக லைகா புரொடக்ஷன்ஸ் விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்க அஜித் 62வது படம் உருவாக இருப்பதாக தெரிவித்தார்கள்.
ஏகே ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாட விக்னேஷ் சிவன் விடிய விடிய வெடி வெடித்து இந்த சந்தோஷ அறிவிப்பை கொண்டாடியுள்ளார்கள்.
கொண்டாட்ட வீடியோவையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக், கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?