சிங்கிள் பசங்களை வெறுப்பேத்துரீங்களா.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாப்பிடும்போதும் ரொமான்ஸ்! வைரல் வீடியோ
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த பல வருடங்களாகவே காதலித்து வரும் நிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் திருமணம் திருமலை திருப்பதியில் ஜூன் 8ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருமணத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கின்றனர். நேற்று திருச்சி அருகில் இருக்கும் கோவில்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்று வந்தனர்.

ஹோட்டலில் சாப்பிடும் போதும் ரொமான்ஸ்
இந்நிலையில் இன்று மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் நயன்தாராவுக்கு பிடித்த உணவை ஊட்டி விடுகிறார்.
இப்படி வீடியோ போட்டு சிங்கிள் பசங்களை வெறுப்பேற்றுகிறீர்களா என நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.