அஜித்தின் 62வது படத்திற்காக விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் இவ்வளவா?
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் ஒரு நடிகர். 2 வருடங்களாக இப்போது வருமா அப்போது வருமா என பார்க்கப்பட்டு கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது.
படத்தின் வெற்றி
சில நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்கள் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
இப்பட தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் ஒரு பேட்டியில், அஜித்தின் வலிமை திரைப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்-அஜித்
அண்மையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அஜித்-விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் தகவல் வந்தது. அப்படத்திற்காக அஜித் ரூ. 100 கோடி கேட்க தயாரிப்பு நிறுவனம் அதிகமாக ரூ. 105 கோடி தருவதாக அவர்களே முன்வந்துள்ளனர்.
தற்போது என்ன தகவல் என்றால் விக்னேஷ் சிவன் இப்படத்திற்காக ரூ, 50 லட்சம் மட்டுமே சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

காரணம்
லைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன்-சிவகார்த்திகேயன் ஒரு படம் இணைய இருந்தார்களாம், அதற்காக அட்வான்ஸ் பணம் எல்லாம் வாங்கினாராம். ஆனால் அந்த படம் டிராப் ஆக இருக்கிறது.
எனவே தான் அப்படத்திற்காக வாங்கிய மீதியை இதில் பெறுகிறாராம்.
செல்வராகவனுடன் விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய நடிகை சோனியா அகர்வால்