டாப் 5 நடிகர்கள் தங்களின் அடுத்த படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம், எவ்வளவு தெரியுமா?

rajini ajith vijay kamal dhanush
By Jeeva Aug 22, 2021 04:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது, இதனால் நடிகர்கள் தங்களின் சம்பளத்தையும் உயர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நாம் டாப் 5 நடிகர்கள் தங்களின் அடுத்த படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.

தனுஷ் - தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகரான தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். மேலும் அவர் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என pan இந்திய திரைப்படமாக திட்டமிடப் பட்டுள்ளது. இந்த அனைத்து மொழிகளிலும் வெளியாகிவுள்ள நிலையில் நடிகர் தனுஷுக்கு இப்படத்திற்காக ரூ 50 கோடியை வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.

கமல் - முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்த உலகநாயகன் கமல் தற்போது மீண்டும் பிஸியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக அவரின் மார்க்கெட் குறைந்துள்ளதால் கமல் தனது ஊதியம் 55 கோடி வரை இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராம்.

அஜித் - தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க 55 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே ஒப்பந்தமானதன் காரணமாக தற்போது வலிமை வரை தான் முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வண்ணம் 55 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறாராம்.

ரஜினி - தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் பெற்று வரும் நடிகராக இருந்து வந்த ரஜினி கடைசியாக நடித்த தர்பார் திரைப்படத்திற்கு 100 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அதேபோல் அண்ணாத்த திரைப்படத்திற்கும் அதே சம்பளம் வாங்கியுள்ளாராம்.

விஜய் - ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெற்று வந்த விஜய் தற்போது அவரை முந்தி தனது அடுத்தப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கியுள்ளார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்திற்காக 85 கோடி வரை பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US