தளபதி 66 படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா ! வெளியான சுவாரஸ்ய தகவல்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆம், தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கும் அவரின் அடுத்த படத்தை இயக்குனர் வம்ஷி இயக்க இருக்கிறார். இப்படத்திற்காக தளபதி விஜய் ரூ.120 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தென்னிந்தியளவில் அதிக சம்பளம் பெரும் நடிகராக விஜய் ஆகியுள்ளார்.
அதுமட்டுமின்றி PAN இந்தியன் படமாக உருவாகும் தளபதி 66படத்தின் பட்ஜெட் 200 கோடி அளவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.