பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் ! அதுவும் விஜய்க்காக வைத்திருந்த கதையா?
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
அதன்படி சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் பா.ரஞ்சித் தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நட்சத்திரம் நகர்கிறது படத்தை தொடர்ந்து ரஞ்சித் விக்ரம் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்படத்தின் கதை இயக்குனர் பா.ரஞ்சித் முன்பு விஜய்க்கு கூறியிருந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.