திடீரென முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி, என்ன கோரிக்கை வைத்துள்ளார் தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர், இவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் தினசரி ரூபாய் ஐந்தாயிரம் என்று வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது திடீரென 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் எனவே கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார்.
விஜய் சேதுபதியின் கோரிக்கையை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இது குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri