நடிகர் விஜய்யுடன் ஒரு காட்சியில் மட்டும் நடித்த முன்னணி நடிகரின் மனைவி ! எந்த படத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் PAN இந்தியன் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் தான் திருமலை, இப்படத்தை தொடர்ந்து விஜய் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். ஆனால் அவருக்கு முன் அந்த கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவின் மனைவியான நம்ரதா நடித்திருந்தார்.
திடீரென திருமலை படத்திலிருந்து நம்ரதா விலகியதால், பின்னர் அவருக்கு பதிலாக ஜோதிகா நடித்தார். இதோ அப்படத்தில் நம்ரதா நடித்த ஒரு சில காட்சிகளின் புகைப்படங்கள்.

