விஜய் டிவி-ன் புதிய சீரியல் தமிழும் சரஸ்வதியும் கதை இது தானா!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய மெகா தொடர் தான் தமிழும் சரஸ்வதியும்.
மேலும் இந்த சீரியலில் பிரபல தொகுப்பாளர்களான தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் கதை குறித்து பார்ப்போம் "சரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண். ஆனால் அவளால் பன்னிரெண்டாம் வகுப்பை கூட படித்து முடிக்க முடியாமல் போனது.
சரியாக படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
இதேபோல் தமிழ் என்கிற தமிழ்செல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவன். தமிழ் தனது கல்வியை நிறுத்திவிட்டு, சூழ்நிலைகளால் சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர்.
அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்" என இரண்டு கதாபாத்திரங்கள் குறித்து கதை தெரியவந்துள்ளது.
அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த புதிய தொடர் ரசிகர்களிடையே இந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.