விஜய்யின் தீவிர ரசிகரான வட இந்திய ரசிகர்! இணையத்தில் வைரலாகும் பதிவு
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் ஹிரா லால் என்ற கட்டட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி ஒருவர் பீகார் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தீவிர விஜய் ரசிகரான அவர் தமிழ் நாட்டில் வேலை செய்த போது, விஜய்யின் ரசிகராக மாறியுள்ளார். மேலும் தற்போது விஜய்யின் டீ-ஷர்ட் உடன் அவரின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
This is Hira Lal, a daily wager, working on some construction in my house in Purnea, Bihar. An ardent #ThalapathyVijay @actorvijay fan..his T shirt gives it away..He spent time in Tamil Nadu n since then hooked onto the actor..He loved #Master and is so looking forward to #Beast pic.twitter.com/CqZsqREynz
— Vishek Chauhan (@VishekC) August 3, 2021