தளபதி விஜய்க்கு மீண்டும் வில்லனாக நடிப்பது குறித்து விஜய் சேதுபதி எடுத்துள்ள முடிவு!
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சூப்பர் டிலக்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக இவர் நடித்த பவானி கதாபாத்திரம் பெரியளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷனுக்காக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
அதில் அவர் "திரும்பவும் விஜய் சார்க்கு வில்லனாக நடிக்க சொன்னாலும் நான் ரெடி" என கூறியுள்ளார்.
இதோ அவர் நமது சினிஉலகத்திற்கு அளித்த பேட்டி