தளபதி 65 படத்தின் செம மாஸ் அப்டேட் - ஜார்ஜியாவில் நடந்த தரமான சம்பவம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் தளபதி 65.
இப்படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் துவங்கியது. விஜய் மற்றும் நெல்சன் இணைந்து புகைப்படங்கள் கூட வெளியானது.
இந்நிலையில் ஜார்ஜியாவில் தீவிரவாதிகளுடன் தளபதி விஜய் சண்டை போடும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டுள்ளதாம்.
ஆம் அதுமட்மின்றி இந்த சண்டை காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு மிகவும் சப்ரைசாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.