தளபதி 65 படத்திற்கு புதிய சிக்கல் - படக்குழுவின் அதிரடி முடிவு

vijay covid 19 pooja hegde thalapathy 65
By Kathick May 07, 2021 02:00 PM GMT
Report

மாஸ்டர் படத்திற்கு பின் தளபதி விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வந்தது. அங்கு விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகளை இந்த வாரம் படமாக்க இருந்தனர்.

ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.        


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US