விஜய்யின் 66வது படம் எப்படிபட்ட கதை- முழு தகவலை கூறிய தயாரிப்பாளர் தில் ராஜு
விஜய் தமிழ் சினிமாவின் என்றும் தளபதியாக இருப்பவர். இவரது படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செம வசூலை ஈட்டியிருக்கிறது, விஜய் படங்கள் மூலம் லாபம் பார்த்தவர்கள் ஏராளம்.
ஆனால் என்னவோ இந்த பீஸ்ட் படம் கொஞ்சம் சறுக்கிவிட்டது, சிலருக்கு படம் நஷ்டத்தை கொடுத்துவிட்டது. இதுவரை படம் ரூ. 210 கோடி வரை வசூலித்துள்ள பிளாப் பட லிஸ்டில் உள்ளது.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் விஜய்யின் உழைப்பிற்காக அந்த படம் நன்றாக ஓடி இருக்க வேண்டும் என கமெண்ட் செய்கின்றனர்.
தளபதி 66
விஜய் பீஸ்ட் படப்பிடிப்பில் இருக்கும் போதே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது அடுத்த படம் என புகைப்படத்துடன் அறிவித்தார்.
அதன்பிறகு இந்த மாத ஆரம்பத்தில் படத்தின் பூஜை போடப்பட்டு ரஷ்மிகா, சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. சமீபத்தில் நடிகர் ஷ்யாமும் இப்படத்தில் நடிக்க இருப்பது தெரிய வந்தது.

தில் ராஜு பேட்டி
இப்போது என்ன விஷயம் என்றால் தெலுங்கில் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய்யின் 66 எப்படிபட்ட படம் என கேட்டபோது அதற்கு அவர், இது பேமிலி என்டர்டெயின்மென்ட் படம் தான். ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷ்னலான குடும்ப கதையுள்ள படம் என கூறியுள்ளார்.
காத்து வாக்குல இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?