படத்தின் படப்பிடிப்பே தொடங்கல, அதற்குள் விற்றுப்போன தளபதி 68 படத்தின் OTT ரைட்ஸ், ஆடியோ- எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடிகராக வலம் வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. படப்பிடிப்பை முடித்த கையோடு வெளிநாடு சென்ற விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே
தளபதி 68 லியோ பட நேரத்திலேயே விஜய் தனது 68வது படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்தது.
இந்த நிலையில் விஜய்யின் 68வது படம் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது.
தளபதி 68
படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றி உள்ளதாம். அதேபோல் இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
படப்பிடிப்பு, பட பெயர் என எதுவும் ஆரம்பிக்காமலேயே படத்தின் வியாபாரம் ரூ. 100 கோடிக்கு மேல் ஆனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.