விஜய்யை வைத்து ஹெச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தின் கதை இதுதானா.. கசிந்த தகவல்
தளபதி 69
GOAT படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என ஏறக்குறைய உறுதியாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. அரசியல் செல்லும் விஜய், 69வது திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். ஆகையால், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 கண்டிப்பாக அரசியல் சம்மந்தப்பட்ட படமாக தான் இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 படத்தின் கதை
மேலும் இயக்குனர் ஹெச். வினோத் பேட்டி ஒன்றில் 'நான் விஜய் சாரை அது அரசியல் கதைக்களமாக தான் இருக்கும்' என கூறியிருந்தார். இந்த நிலையில், தளபதி 69 படத்தின் கதைக்கரு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 திரைப்படம் மக்களுக்காக போராடும் ஒரு தலைவனின் கதையை தான் ஹெச். வினோத் விஜய்க்காக தயார் செய்துள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் ஒர்க் தற்போது நடந்துகொண்டு இருப்பதாகவும் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.