அஜித் படத்தின் கூட்டத்தை பார்த்து விஜய் நொந்து தயாரிப்பாளரிடம் சொன்னது இதுதான்
விஜய், அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள்.
இவர்கள் படங்கள் ஒரே நாளில் வருகிறது என்றால் தியேட்டரே பதட்டத்தில் தான் இருக்கும்.
ஏனெனில் அந்த அளவிற்கு இரு நடிகரின் ரசிகர்களும் வெறிப்பிடித்து இவர்கள் படத்தை பார்ப்பார்கள்.
இந்நிலையில் ப்ரண்ட்ஸ், தீனா படம் ஒன்றாக வந்த போது, முதல் ஒரு வாரத்திற்கு ப்ரண்ட்ஸ் படத்திற்கு கூட்டமே இல்லையாம்.
விஜய் இதை பார்த்து அந்த படத்தின் தயாரிப்பாளரிடம், இங்க பாருங்க அஜித் படத்துக்கு எப்படி கூட்டம் வருது பாருங்க என்று நொந்துவிட்டாராம்.
தயாரிப்பாளரும் இந்த வாரத்தை விடுங்கள், அடுத்த வாரத்தில் நம்ம படம் தான் ஜெயிக்கும் என்று சொல்ல, அவர் சொன்னது போலவே ப்ரண்ட்ஸ் லேட் பிக்கப் ஆகி செம்ம ஓட்டம் ஓடியதாம்.