வாரிசு திரைப்படம
நடிகர் விஜய் இப்போது தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு முதன்முறையாக விஜய்யை வைத்து படம் இயக்குகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது, எப்போதோ படப்பிடிப்பு முடிந்திருக்க வேண்டியதாம். இடையில் இயக்குனர் வம்சிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே படப்பிடிப்பு முடிய தாமதமாகியுள்ளது.
இப்படத்திற்கான ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது, அதையும் நடிகர் விஜய் தான் பாடியுள்ளாராம்.
விஜய் குறித்து சம்யுக்தா
இந்த படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதில் ஒருவர் தான் பிக்பாஸில் கலந்துகொண்ட சம்யுக்தா. இவர் வாரிசு படம் குறித்து ஒரு பேட்டியில், விஜய் நடனம் ஆடுவதை நேரிலேயே கண்டது மகிழ்ச்சியான தருணம். ஒரே டேக்கில் அவர் நடனம் ஆடி முடித்ததை அங்கு இருந்தவர்கள் அனைவருமே கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.
விஜய் தன்னிடம் வந்து மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறியதாக சம்யுக்தா தெரிவித்திருக்கிறார்.
Actress #Samyuktha about #ThalapathyVijay ???#Varisu #Thalapathy67 @actorvijaypic.twitter.com/0APLO1xIbb
— Vijay Fan Page ? (@Vijay_Fan_Page_) October 17, 2022