மறைந்த தனது தங்கை குறித்து உருக்கமாக பேசிய விஜய்.. பலரும் பார்த்திராத வீடியோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவரை ரசிகர்கள் பலரும் தளபதி என அழைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு இரு படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் இறுதியில் வெளிவந்த லியோ என இரு திரைப்படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.
இதில் லியோ திரைப்படம் ரூ. 598 கோடி வரை வசூல் செய்து இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்த வசூல் சாதனையை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தங்கை வித்யா
நடிகர் விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார். அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே உடல்நல குறைவு காரணமாக மரணடைந்துவிட்டார் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், மறைந்த தனது தங்கை குறித்து நடிகர் விஜய் உருக்கமாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் விஜய்க்கு யாரோ ஒருவர் பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த பரிசில் விஜய்யும் அவருடைய தங்கை வித்யாவும் இருப்பது ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தை பார்த்தவுடன் தனது தங்கை குறித்து உருக்கமாக பேசிய விஜய்யின் வீடியோ இதோ..
Thalapathy ❤️ @actorvijay
— Shankar (@Shankar018) December 9, 2023
pic.twitter.com/zoVJxT2lLT

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
