சும்மாவே என் படத்திற்கு பிரச்சனை வரும்! இப்போ..: ஜன நாயகன் விழாவில் விஜய் பேசியது
விஜய்யின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. அந்த விழா இன்று ஜீ தமிழில் ஒளிபரப்பானது.
மேடையில் விஜய் பேசும்போது ஆரம்பத்தில் மலேசியா மக்கள் பற்றி பேசிவிட்டு அதன் பின் ஜன நாயகன் படம் பற்றி பேச தொடங்கினார்.
ஹெச் வினோத் உடன் முன்பே இரண்டு படங்கள் பண்ண வேண்டியது, அது எல்லாம் நடக்காமல் போன நிலையில் ஜனநாயகன் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என விஜய் கூறினார்.

சும்மாவே பிரச்சனை வரும்..
2023லேயே இந்த படம் பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது. அப்போது நான் அரசியலில் நுழைவதாக அறிவித்துவிட்டேன். அது பற்றி தயாரிப்பாளரிடமும் பேசினேன்.
சும்மாவே என் படத்திற்கு பிரச்சனை வரும். இப்போது வேறு ட்ராக்கில் வேறு செல்கிறேன். சொல்லவா வேண்டும். அதனால் உங்களுக்கு படம் தயாரிப்பதில் சம்மதமா என KVNயிடம் கேட்டேன்.
அவரும் தயக்கம் இன்றி பாசிட்டிவ் ஆக பேசியதால் தான் படம் உருவானது என விஜய் கூறி இருக்கிறார்.
