பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி விஜய்! குருபூஜை நாளில் போட்ட பதிவு
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் குதித்து இருக்கிறார். 2026 தேர்தலில் போட்டி என்பதை சமீபத்தில் நடந்த மாநாட்டில் விஜய் அறிவித்துவிட்டார்.
மேலும் கொள்கை என்ன, யாரெல்லாம் தனக்கு எதிரி என்பதையும் அவர் தெளிவாக கூறிவிட்ட நிலையில் அதை பற்றி தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வாதிகள் மத்தியிலும் விவாதமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
குருபூஜை
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர்.
பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.
இவ்வாறு விஜய் பதிவிட்டு இருக்கிறார்.
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக… pic.twitter.com/7PyrVNbid4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
