சிவகார்த்திகேயனுக்கு முன்பே Don படத்தை பார்த்த விஜய்- என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிபி சக்ரவர்த்தி.
இவர் படம் இயக்குவதற்கு முன்பே மாஸ்டர் பட குட்டி ஸ்டோரி பாடலை வடிவமைத்ததன் மூலமாகவே பிரபலமாகிவிட்டார்.
சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கியுள்ள Don படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் சிபி படம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பின் போதே டான் கதையை பார்த்துள்ளாராம்.
காளி வெங்கட் மற்றும் பால சரவணனை வைத்து டான் கதையை குட்டி வீடியோவாக எடுத்திருந்த சிபி மெர்சல் சமயத்தில் விஜய்யிடம் காட்டியுள்ளார்.
அதைப்பார்த்த விஜய் சந்தோஷமாக வாழ்த்தியதாகவும் எஸ்.ஜே.சூர்யாவிடமும் கதையை கூறி பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 2022ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
வழக்கம் போல் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
