விஜய்யின் வாரிசு
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ஜெயசுதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் வாரிசு படத்தில் விஜய்யின் நடிப்பு மோசமாக இருந்தது என கூறி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது,
'வாரிசு படத்தில் சரத்குமார் மட்டும் தான் சரியாக நடித்திருந்தார். அவரை தவிர்த்து வேறு எந்த ஒரு நடிகரும் சரியாக நடிக்கவே இல்லை. விஜய்யும் தப்பு தப்பா நடித்திருந்தார். ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படி தான் ஆணவமாக ஒரு மகன் இருப்பாரா! அதை அவருடைய தந்தையிடம் வெய்துகொள்ளட்டும்.
அதை அவர் திரையில் செய்ய வேண்டாம், ஏனென்றால் அவர் செய்வதை பார்த்துவிட்டு, ரசிகர்கள் அவர்களுடைய தந்தையின் முன் அதே போல் தான் செய்வார்கள்' என பேசினார். இது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?