பல முறை மோதிக்கொண்ட விஜய் - அஜித் படங்கள்.. அதிக வெற்றிகள் யாருக்கு கிடைத்தது
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவில் இரண்டு மாபெரும் தூண்கள் விஜய் - அஜித். இவர்கள் இருவரும் திரையுலகில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் எப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டார்களோ, அதே போல் கொண்டாடப்பட்டவர்கள்தான் விஜய் - அஜித். சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் பலமுறை படங்கள் மூலம் மோதிக்கொண்டுள்ளனர். ஆனால், அவை யாவும் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்துள்ளது.

இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு வாரிசு - துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்து மோதிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தி எபிக் க்ளாஷ் நடக்கவுள்ளது. ஆம், வருகிற 23ஆம் தேதி தெறி மற்றும் மங்காத்தா ரீ ரிலீஸ் ஆகிறது.
மோதிக்கொண்ட படங்கள்
இப்படியொரு சூழல் உருவாகியுள்ள நிலையில், இதுவரை இவர்கள் இருவருடைய படங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்து மோதிக்கொண்டது எப்போது? அதில் யார் வெற்றிபெற்றார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
- கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி (1996) - யாருக்கும் வெற்றியில்லை
- பூவே உனக்காக vs கல்லூரி வாசல் (1996) - விஜய்க்கு வெற்றி
- காலமெல்லாம் காத்திருப்பேன் vs நேசம் (1997) - யாருக்கும் வெற்றியில்லை
- காதலுக்கு மரியாதை vs ரெட்டை ஜடை வயசு (1997) - விஜய்க்கு வெற்றி
- துள்ளாத மனமும் துள்ளும் vs உன்னைத்தேடி (1999) - யாருக்கும் வெற்றியில்லை
- குஷி vs உன்னைக்கொடு என்னைத் தருவேன் (2000) - விஜய்க்கு வெற்றி
- Friends vs தீனா (2001) - அஜித்துக்கு வெற்றி
- பகவதி vs வில்லன் (2002) - அஜித்துக்கு வெற்றி
- திருமலை vs ஆஞ்சநேயா (2003) - விஜய்க்கு வெற்றி
- ஆதி vs பரமசிவம் (2006) - அஜித்துக்கு வெற்றி (இரண்டும் தோல்வி படங்கள் என்றாலும், அதில் பரமசிவம் முன்னிலையில் உள்ளது).
- போக்கிரி vs ஆழ்வார் (2007) - விஜய்க்கு வெற்றி
- ஜில்லா vs வீரம் (2014) - அஜித்துக்கு வெற்றி
- வாரிசு vs துணிவு (2023) - அஜித்துக்கு வெற்றி