அஜித்தும் நம்பர் 1 இல்லை, விஜய்யும் நம்பர் 1 இல்லை.. முதலிடத்தில் வேறு யார் தெரியுமா
அஜித் - விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இதனால் இப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கூச்சல் துவங்கிவிட்டது.
சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் 1 என்று பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரபல டிக்கெட் புக்கிங் தளமான புக்மை ஷோ 2022ல் அதிகம் தங்களுடைய தளத்தில் புக் செய்யப்பட்ட டாப் 10 படங்கள் குறித்து லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
டாப் 10 லிஸ்ட்
- கே.ஜி.எப்
- ஆர்.ஆர்.ஆர்
- காந்தாரா
- தி காஷ்மீர் பைல்ஸ்
- பொன்னியின் செல்வன்
- பிரம்மாஸ்திரா
- விக்ரம்
- திரிஷ்யம் 2
- Bhool Bhulaiyaa 2
- டாக்டர் ஸ்ட்ரேஞ் 2
இந்த ஆண்டில் மாபெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருந்த விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை இரு திரைப்படங்கள் வெளிவந்தும், இந்த டாப் 10 லிஸ்டில் இருவரும் முதலிடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.