விஜய், அஜித் வேண்டாம் என்று ஒதுக்கிய திரைப்படம்.. வேறொரு முன்னணி நடிகர் நடித்த சூப்பர்ஹிட் ஆனது
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவரும் நிராகரித்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
நிராகரித்து அஜித், விஜய்
பல ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் அகத்தியன் நடிகர் விஜய்க்கு தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் இயக்குனர்கள் விஜய்க்கு கூற வரும் கதைக்களம் எஸ்.ஏ.சி தான் கேட்பார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அகத்தியன் கூறிய கதையை கேட்ட எஸ்.ஏ.சி இது விஜய்க்கு செட் ஆகாது என கூறி நிராகரித்துவிட்டாராம்.

பின் அஜித்திடம் சென்று அப்படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் கூறியுள்ளார். அஜித்தும் இந்த கதையை நிராகரித்துள்ளார். இப்படி அன்றைய காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த அஜித் விஜய் இருவரும் இந்த கதையை நிராகரித்துள்ளனர்.
ஓகே சொன்ன ஹீரோ, படம் சூப்பர் ஹிட்
பின் அவர்களை போலவே முன்னணி நடிகராக இருந்த கார்த்திக் இடம் தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார். நடிகர் கார்த்திக்கிற்கு இந்த கதை பிடித்துப்போக உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என கூறியுள்ளார். படமும் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தின் பெயர் கோகுலத்தில் சீதை.

துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri