கையில் இந்திய கோடியுடன் நடிகர் விஜய்! இந்த அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துளீர்களா?
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
இதனிடையே சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சென்று தளபதி விஜய்யை சந்தித்தார்.
அப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் வைரலானது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினம் என்பதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் கையில் கோடியுடன் போஸ் கொடுத்துள்ள பழைய புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
