நேருக்கு நேர் மோதும் விஜய் அஜித் படங்கள்.. வெற்றி யார் பக்கம்
விஜய் - அஜித்
தமிழ் திரையுலகில் இரு துருவங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திரங்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித்.
இந்த ஆண்டில் அஜித் நடித்து வெளிவந்த வலிமை மற்றும் விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் இரு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

மாஸ்டர் VS வலிமை
இந்நிலையில், வரும் மே 1 உழைப்பாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாள் ஆன அன்று, எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை படம் ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகிறது.
அதே நாளில் சன் டிவியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பு ஆகிறது.

இதனால், நேரடியாக தொலைக்காட்சியில் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் திரைப்படங்களில் TRPல் எது அதிகமாக பெற்று வெற்றிபெறப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.