சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ, ஹீரோயின்.. அதுவும் இவர்களா
லிங்குசாமியின் சண்டகோழி
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி. விஷால் கதாநாயகனாகவும், மீரா ஜாஸ்மின் கதாயாகியாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படம், ஹீரோ, ஹீரோயினாக நடித்த இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் ராஜ் கிரண், லால், கஞ்சாகருப்பு, தென்னவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
[
முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ, ஹீரோயின்
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோ, ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டது விஷால், மீரா ஜாஸ்மின் கிடையாதாம். ஆம், சண்டக்கோழி திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக தீபிகா படுகோண் தான் நடிப்பதாக இருந்ததாம்.
இதில் கதையை கூட கேட்காமல் சண்டக்கோழி படத்தை நிராகரித்துவிட்டாராம் நடிகர் விஜய். அதே போல், வெவேறு காரணங்களால் சண்டக்கோழி படத்தில் நடிகை தீபிகா படுகோண்வால் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.
ஒருவேளை சண்டக்கோழி படத்தில் தீபிகா படுகோண் நடித்திருந்தால், இதுவே அவருடைய சினிமா கேரியரில் முதல் திரைப்படமாக அமைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
