பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் பெயர் இதுதான்.. முதல் முறையாக வெளிவந்த செய்தி
2022ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ள படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் பல திரைபிரபலங்கள் நடித்துள்ளனர்.
முழு படப்பிடிப்பும் முடிந்து தற்போது பீஸ்ட் படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் First லுக் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் ஏஜென்ட் சாய் என்ற கதாபாத்திரத்திலும், நடிகை பூஜா ஹெக்டே ஸ்ரீரூபா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri